எழுதித் தீராத வார்த்தைகள்
மூன்றாவது தொகுப்பு வரும் இந்த வேளையில், எனது முன்னுரை அவசியமா என்ற கேள்வி எழுகிறது. எனது கவிதைகள் மட்டுமே பேசினால் போதும் என்று தோன்றுகிறது. எனது கவிதைகளே எனது மொழி. எனது கவிதைகளே நான் நிகழ்த்துகின்ற உரையாடல். எனது கவிதைகளே நான் கடந்து வந்த பாதையின் சுவடுகள்.
அதைப் பற்றித் தனியாக என்ன சொல்ல?
உறக்கத்தையும் கவிதையையும் போல மாமருந்து ஏதுமில்லை.
எனது இருப்பு, எனது அடையாளம், இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் யாவும் என் கவிதைகளில் தான் இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன். எனது கவிதைகள் கோட்பாடுகளில் இருந்து பிறப்பவை அல்ல. வாழ்க்கையிலிருந்தும் உணர்வுகளிலிருந்துமே ஜீவிக்கின்றன.
எழுதி எழுதித் தீராத வார்த்தைகளாக என் பின்னால் பயணிக்கின்றன கவிதைகள், எவ்வளவு எழுதினாலும் இன்னும் எழுதுவதற்கு ஏதொவொன்றை மிச்சம் வைத்தபடி.
வாழ்க்கை, ஒரு கவிதையைப் போல இருக்க வேண்டும் எனும் பேரவா எனக்கு. அப்படி இல்லாமல் இருக்கிறது இந்த வாழ்க்கை. ஆனால், கவிதையே வாழ்க்கையாக ஆகிப் போனதில் பெருமகிழ்ச்சியே.
என் கவிதைகளோடும் என்னோடும் பயணிக்கும் நண்பர்களுக்கும், எனது கவிதைகளைப் பதிப்பிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் எனது அன்பும் நன்றிகளும்.
-- மனுஷி
Kavithai nayaganai maranthuttiye ethu unake nalla eruka? Kavithai ku mattum dhan nan venuma unagu?
பதிலளிநீக்குகவிதைக்கு மட்டும் நாயகனாக மட்டும் தான் என்னை உபயோக படுத்துவாயா?
பதிலளிநீக்குநான் மதுரையில் இருக்கிறேன். எவ்வாறு நான் இந்த புத்தகத்தை வாங்குவது ? வலைதளம் மூலம் வாங்க இயலுமா ?
பதிலளிநீக்கு