எனது மௌனங்களில் ஒன்றை
உனக்குப் பரிசளிக்கிறேன்.
கையிலேந்தி நட.
படுக்கையருகில் வைத்து உறங்கு.
உனது மதுவில் பிழிந்து குடி.
உனது தொலைதூர பயணத்தில் ஏதேனும்
ஒரு நீர்நிலையில் கரைத்துவிடு.
அல்லது
உனது காதலிக்குப் பரிசாகக் கொடு.
எனது பாதையில் கொட்டிக் கிடக்கும்
மலர்களைச் சேகரித்தபடி
வனத்தைத் தேடிப் போகிறேன்.
அங்கே காத்திருக்கிறாள் யட்சி
என் சொற்களை மடியிலேந்தியபடி.
-- மனுஷி
ஆமாம் உனக்காக காது கொண்டு தான் இருக்கேன் நீ எப்போ வருவாய் என
பதிலளிநீக்கு