அந்தச் சாலையோரத்தில் நின்று கொண்டுதான்
நிராதரவாய் அழுது கொண்டிருந்தாள் அவள்.
அந்தச் சாலையோரத்தில் தான்
இரத்த வெள்ளத்தில் நினைவு தப்பிக் கிடந்தான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
இறந்து போன பறவையின் சடலத்தைப் புதைத்து வைத்தாள்
ஒரு சிறுமி.
அந்தச் சாலையோரத்தில் தான்
செவ்வந்திப் பொழுதில்
தனது நேசத்திற்குரியவளில் உதடுகளில்
முத்தமிட்டான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
சக்கரத்தில் நசுங்கி இறந்து கிடந்தது ஒரு நாய்.
அந்தச் சாலையோரத்தில் தான்
தாகமாய் நின்று கொண்டிருந்தார் கடவுள்.
அந்தச் சாலையை நோக்கித்தான்
ஒரு பாட்டில் தண்ணீருடன்
சைக்கிளில் போகிறான் சாத்தான்.
-- மனுஷி
நிராதரவாய் அழுது கொண்டிருந்தாள் அவள்.
அந்தச் சாலையோரத்தில் தான்
இரத்த வெள்ளத்தில் நினைவு தப்பிக் கிடந்தான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
இறந்து போன பறவையின் சடலத்தைப் புதைத்து வைத்தாள்
ஒரு சிறுமி.
அந்தச் சாலையோரத்தில் தான்
செவ்வந்திப் பொழுதில்
தனது நேசத்திற்குரியவளில் உதடுகளில்
முத்தமிட்டான் அவன்.
அந்தச் சாலையோரத்தில் தான்
சக்கரத்தில் நசுங்கி இறந்து கிடந்தது ஒரு நாய்.
அந்தச் சாலையோரத்தில் தான்
தாகமாய் நின்று கொண்டிருந்தார் கடவுள்.
அந்தச் சாலையை நோக்கித்தான்
ஒரு பாட்டில் தண்ணீருடன்
சைக்கிளில் போகிறான் சாத்தான்.
-- மனுஷி
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஅந்த சாலையோரத்தில்தான் ஒரு கவிதைக்காக, ஒரு சிறுகதைக்காக, ஒரு புதினத்திற்காக..,
பதிலளிநீக்குகாத்துக்கிடக்கிறான் ஒரு வாசகன். .
அந்த சாலையோரத்தில்தான்
பதிலளிநீக்குகாத்துக்கிடக்கிறான் ஒரு வாசகன். . அது நான் தான் . காது கொண்டு இருப்பது உனக்காக தான் . நீ எப்போ வருவாய் என .