வெள்ளி, 25 டிசம்பர், 2015

பைத்தியக்காரியின் மழை

வறண்ட பாலை நிலத்தில் பெய்யும்
பெருமழை அவன்.
தாகம் தீர
மிடறு மிடறாக
அள்ளிப் பருகுகிறாள்
பைத்தியக்காரி.
மழைத்தாரைகள்
அன்பின் வாசனையோடும்
கருணையின் நிறத்தோடும்
அவள் பின்னால் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
நதியாகி
கடலில் சங்கமிக்கும் முன்
அத்தனைத் துளிகளையும்
குடித்து விடுவதென
உரத்துச் சொன்னபடி
நடந்து போகிறாள்.
அவள் பின்னால் ஒரு நதியும்
முன்னால் ஒரு வனமும்
பிரம்மாண்டக் காட்சியாய் விரிந்தன.
அந்த வனத்தில் தான்
அவள் யட்சியானாள்.
அந்த நதியில் தான்
அவள் தேவதையானாள்.