திங்கள், 25 ஜனவரி, 2016

ஒடிஸி கவிதை வாசிப்பு

ஞாயிற்றுக் கிழமையின் மாலைப்பொழுதைக் கவிதைகளோடு செலவிடுவதில் வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அடையாறு ஒடிஸி புக் ஸ்டாலில் நடந்த கவிதை வாசிப்பு நிகழ்வு குதூகலமான மகிழ்ச்சியைப் பூங்கொத்துகளாக ஆக்கி என் கையில் தந்தது.
நான் வியந்து பார்த்த பெண் ஆளுமைகள்  குட்டி ரேவதியும் சுகிர்தராணி அக்காவும். 2008இல் அவர்களை ஒரு நேர்காணலின் பொருட்டு நான் சந்தித்த போது என் கால்கள் தரையில் இல்லை. அவ்வளவு பிரமிப்போடு சந்தித்து மீண்டிருக்கிறேன். இப்போது அவர்களோடு நானும். இல்லை இல்லை அவர்கள் அடிச்சுவட்டில் நானும் என்பதில் பெருமை எனக்கு.
நேரக்கட்டுப்பாடுகள் இன்றி கவிதைகளை வாசிக்க முடிந்த நிகழ்வு இது. பெண் சுதந்திர வெளியின் குரலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளாகக் கேட்க முடிந்தது. கவிதையைச் சுவைக்க மொழி ஒரு தடையில்லை என்பதையும் உணர்ந்தேன். இந்த நிகழ்வுக்கு என் பெயரைப் பரிந்துரைத்த கவிதை தேவதை குட்டி ரேவதிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராகமாலிகாவுக்கும் என் முத்தங்கள்.
இந்த வருடத்தில் அன்பானவர்களின் அரவணைப்பில் திளைத்துப் போயிருக்கிறேன். எனக்காக வந்திருந்த அன்பு நண்பர் வெளி ரங்கராஜன். அவருக்கு எப்படி என் அன்பைச் சொல்ல. ஆசிர்வதிக்கப்பட்ட இளவரசியாய் உணரச் செய்யும் அவரது அன்பின் நிழல்.
அதேபோல என்மீது பாசாங்கற்ற அன்பைக்.கொண்டிருக்கும் தோழி நந்தினி, நண்பர்கள் தர்மா, ராஜகோபால், பிரசாந்த் இவர்களுக்கு நன்றி சொல்லிப் பிரிக்க மாட்டேன். இவர்கள் என் உறவுகள்.
கவிதையால் ஆனது என் உலகு.
அன்பால் ஆனது என் உறவு.
Kutti Revathi Sukirtha Rani Sharanya Manivannan Srilata Krishnan Ragamalika Karthikeyan Swarna Rajagopalan Veli Rangarajan Nandineeshree Sha Payani Raja Gopal Rainbow Raji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக